விடுதலைப் புலிகளின் ஆளுகையில் கிளிநொச்சி இருந்த நேரத்தில் தற்போது ஆதன வரி அதிகரிப்பு என்று உண்ணாவிரதம் இருக்கும் வர்த்தகர் புலிகளிடம் வாங்கிய தண்டனை தொடர்பான சுவாரசியமான கதை ஒன்று வெளிவந்திருக்கிறது…
தற்போது உண்ணாவிரதம் இருக்கும் ஈ.பி.டீ.பி சந்திரகுமார் ஆதரவாளரான கு.மகேந்திரன் அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் தனது கிணற்றில் ஊர் மக்கள் நீர் அள்ளி குடிக்கிறார்கள் என்பதற்காக தனது கிணற்றுக்குள் பாரிய அளவிலான கழிவு ஒயிலை ஊற்றி ஊர் மக்கள் நீரை பயண்படுத்த தடையை ஏற்படுத்தியிருந்தார்.
இதை கேள்வியுற்ற புலிகளின் நிர்வாகப்பிரிவு வர்த்தகர் மகேந்திரன் அவர்களுக்கு உரிய தண்டனையை வழங்கி தகுந்த நடவடிக்கை எடுத்திருந்தனர். இதனால் அன்றிலிருந்து புலிகள் மீது கடும் வெறுப்புணர்வோடு இருந்த குறித்த வர்த்தகர் 2009க்கு பின் ஈ.பி.டீ.பி சந்திரகுமார் உடன் கைகோர்த்திருந்தார்.
இவளவு கீழ்த்தரமான மனநிலையுடைய இந்த வர்த்தகர் தான் இப்போது உண்ணாவிரதம் என்ற பெயரில் அரசியல் நாடகம் நடாத்தி வருகின்றார்.
குறித்த வர்த்தகரின் மனநிலை போக்கை புரிந்த அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் தற்போது வர்த்தகரை பிரிந்து தனித்து வாழுகின்றமையும் குறிப்பபிடத்தக்கது.
இப்படியான 19 கோடி சொத்துக்கு அதிபதியான ஒருவர் தான் தற்போது கிளிநொச்சியில் போலி உண்ணாவிரத நாடகம் நடாத்தி வருகின்றார்.
குறிப்பு :- ஆதன வரி என்பது ஒருவரின் ஆண்டு வருமானத்தில் 10% ஐ பெற்றுக்கொள்வதே ஆகும்.
உதாரணம் :- ஒருவருக்கு ஆண்டுக்கு 1000 ரூபா வருமானம் கிடைத்தால் அவர் 100 ரூபாயை ஆதனவரியாக செலுத்த வேண்டும். குறித்த வரியை ஒரு ஆண்டில் நான்கு பிரிவுகளாக செலுத்தலாம்.
கிளிநொச்சியில் உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் கங்கை கட்டடப் பொருள் வாணிப உரிமையாளர் பிரதேச சபைக்கு செலுத்தும் ஆதன வரி விபரங்கள்
கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள மூன்றுமாடி வீடு
- முதல் மாடிக்கு 66 ஆம் ஆதன இலக்கத்தில் ரூபா 11129.00
- இரண்டாம் மாடிக்கு 67/1ஆம் ஆதன இலக்கத்தில் ரூபா 8600.00
- கீழ்தளத்திற்கு 67/2ஆம் ஆதன இலக்கத்தில் ரூபா 7882.00
- காணியில் உள்ள டயலக் கோபுரம் 67/3 ஆம் ஆதன இலக்கத்தில் ரூபா 10644.00
கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள இரண்டு மாடி வீடு
- 92 ஆம் ஆதன இலக்கத்தில் ரூபா 9017.00
- கட்டடபொருள் வாணிபம் 94 ஆம் ஆதன இலக்கத்தில் ரூபா 12000.00
- ஐயனார் கோவில் வீதி உள்ள வீடு 23ஆம் ஆதன இலக்கத்தில் ரூபா 3940.00
- கனகாம்பிகைகுளம் A9 வீதியில் உள்ள வீடு 668 ஆம் ஆதன இலக்கத்தில் ரூபா 2781.00
- கனேசபுரம் மீனாட்சி அம்மன் வீதியில் உள்ள வெறும் காணி 29ஆம் ஆதன இலக்கத்தில் ரூபா 100.00
- குமாரசாமி வீதியில் உள்ள தேக்கம் காடு 50.ஆம் ஆதன இலக்கத்தில் ரூபா1669.00
மொத்தமாக பிரதேச சபைக்கு ஒரு வருடம் செலுத்தும் ஆதனவரி மொத்தம் =76902.00
இப்போதைய சந்தை பெறுமதிக்கு இவரது மொத்த சொத்து மதிப்பு 19கோடி ஆனால் விலைமதிப்பீட்டு திணைக்களத்தின் மதிப்பீட்டில் 7கோடி 69 லட்சம் இவரது வருட வருமானம் 7லட்சத்தி அறுபத்தி ஒன்பதாயிரம் இவர் பிரதேச சபைக்கு கட்டும் ஆதன வரி 76902.00 ரூபா ஆனால் இவருக்கு அவரது காணியில் உள்ள தொலைத்தொடர்பு கோபுரத்திற்கான மாத வருமானம் மட்டும் 106640.00
முடிவு உங்கள் கையில்….
கரைச்சி பிரதேச சபையால் அறவிடப்படும் ஆதனவரியை எதிர்த்து உண்ணாவிரதம் செய்துகொண்டிருப்பது கிராமத்தின் பாமர மக்களோ அல்லது வறுமையில் வாழுகின்ற மக்களோ அல்ல கிளிநொச்சியில் ஈனத்த தனமாக அரசியல் செய்யும் ஈபிடிபி சந்திரகுமாரின் சூழ்ச்சி வலையில் விழ்ந்த இப்போதைய மதிப்பீட்டின் படி சுமார் பத்தொன்பது கோடி சொத்துக்கு சொந்தன்காரன் ஆன கிளிநொச்சியின் மிகப்பெரிய பணக்கார வர்த்தகர் ஒருவர்
வரி ஆரம்பிக்கப்பட்டு 1 வருடம் நிறைவடைந்து இவ்வளவுகாலமாக எந்த வித பிரச்சனைகளும் யாருக்கும் இருந்ததில்லை ஏன் உண்ணாவிரதம் இருக்கின்ற வர்த்தகரே ஆதனவரியை கட்டமுடியாமல் உண்ணாவிரதம் இருக்கவில்லை அவர் தனது சொத்துக்குரிய ஆதனவரியை செலுத்தி இருக்கிறார்.
தேர்தல் நெருங்கி இருப்பதால் குறித்த முதலாளி வர்த்தகரை ஈபிடிபி சந்திரகுமார் ஏவி விட ஊடகவியலாளர் எனும் பெயரில் சந்திரகுமாரின் அலுவலகத்திலையே வாழும் தமிழ்ச்செல்வன் , சிவா மற்றும் கட்சியின் விசுவாசியுமான தினேஷ் ஆகியவர்கள் முகநூலில் விளம்பரம் செய்ய கட்சியின் பிரதேச சபை உறுப்பினரான கள்ள மர வியாபாரி காந்தன் தலமையில் கட்சியின் மற்றைய உறுப்பினர்களும் துண்டுப்பிரசுரங்களை கிளிநொச்சி நகரில் ஒட்டி வருகின்றனர் இதிலிருந்தே அழகாக தெரிகிறது கட்சி அரசியலுக்காக மக்களை குழப்பி வருகின்றார்கள் என்று அன்பான தேசியத்தின் கீழ் பயணிக்கும் வர்த்தகர்களே சூழ்ச்சி வலையில் வீழ்ந்து விடாது பதிலடி கொடுக்க தயாராகுங்கள்
அதுமட்டுமல்லது ஆதனவரி செலுத்த முடியாத மக்கள் எந்த நேரத்திலும் பிரதேச சபைக்கு சென்று பேசலாம் அவர்கள் ஆராய்ந்து உங்களுக்கு சாதகமாக தீர்வுகளை தர தயாராக இருக்கிறார்கள்
தேர்தலில் தோற்று விடுவோமே எனும் பயத்தில் ஆதனவரியில் அரசியல் செய்யும் கூட்டத்தை மக்கள் நன்கு புரிந்து கொண்டு சூழ்ச்சி வலைகளில் வீழ்ந்து விடாதீர்கள்