மறவன்புலவு காற்றாலைக்கு எதிரான போராட்டங்களை முன் நின்று நடாத்திய சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காற்றாலையை எதிர்த்து போராட்டம் நடாத்திய மக்களை வாள்களுடன் சென்று அச்சுறுத்தியவர் நபர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.
கைது செய்யப்பட்ட பிரதேசசபை உறுப்பினருடைய பிறந்த தினம் நேற்று என்பதால் அவருடை வீட்டில் பொதுமக்கள் பலர் கூடியிருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து மக்கள் கூறுகையில், காற்றாலையை எதிர்த்து போராட்டம் நடாத்திய மக்களை வாளுடன் துரத்தி அச்சுறுத்திய ஒரு திருடன் மீது பொலிஸார் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என விசனம் வெளியிட்டுள்ளனர்.
வாளுடன் துரத்தி அச்சுறுத்திய நபர் தனது வீட்டில் பிரதேச சபை உறுப்பினரால் தாக்குதல் மேற்கொண்டதாக முறப்பாடளித்துள்ளார்.
இதனையடுத்தே பிரதேச சபை உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் தம்மை விரட்டியவர் மீது நடவடிக்கை எடுக்காமல் , பொலிஸார் பக்கசார்பாக நடந்து கொள்ளுவதாக பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.