சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பிஞ்சு குழந்தை கண்ணாடி அறைக்குள் வைக்கப்பட்ட நிலையில் அதை பார்த்து மருத்துவர் கண்ணீர் விட்டு அழும் வீடியோ நெஞ்சை உருக்கியுள்ளது.
உலக நாடுகளை பீதியில் ஆழ்த்தியுள்ள கொரோனா வைரஸ் சீனாவில் தான் அதன் தொடக்கத்தை கண்டது.
வைரஸ் பாதிப்பால் இதுவரை சீனாவில் 250-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
இதோடு 12000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவின் wuhan நகரில் தான் கொரோனாவின் பாதிப்பு அதிகளவில் உள்ளது.
இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிஞ்சு குழந்தை ஒன்று wuhan நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளது.
அந்த குழந்தை கண்ணாடியால் மூடப்பட்ட தனியறையில் வைக்கப்பட்டுள்ளது.
அந்த அறைக்கு வெளியே நின்று கொண்டு மருத்துவரை போல இருக்கும் நபரை நோக்கி குழந்தை கை காட்டி சைகை செய்தது.
இதை பார்த்த அவர் குழந்தையின் நிலையை கண்டு கண்ணீர் விட்டு அழுதார்.
இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி பார்ப்போர் மனதை கலங்கடித்துள்ளது.
My heart went out to this little baby infected with #coronavirus #wuhan
pic.twitter.com/FMXBOSd2qs— Harsh Goenka (@hvgoenka) February 1, 2020