தமிழ், தெலுங்கு, படங்களில் நடித்து மிகவும் பிரபலமான, முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை அனுஷ்கா. பாகுபலி படத்தில் நடித்த இவர் மேலும் அவரது மார்க்கெட்டை அதிகரித்துக் கொண்டே சென்றார்.
இதை தொடர்ந்து, உடல் எடை அதிகரித்துள்ள இவர் தற்போது படங்களில் எதுவும் நடிக்காமல் உடல் எடை குறைப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் ஆன்மீக பயணத்தை மேற்கொண்டு குடும்பத்தினருடன் கோவில் கோவிலாக சென்று வருகிறார் என்று பேச்சுகள் இருந்தது.
அவருக்கு விரைவில் திருமணம் ஆக வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு கோவிலுக்கு சென்று வருகிறார் என்று அனைவராலும் பேசப்பட்டது. முன்னதாக நடிகர் பிரபாஸ் – அனுஷ்கா காதலித்து வருவதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்தது. ஆனால் இதுகுறித்து இருவரும் எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில் அனுஷ்கா கிரிக்கெட் வீரர் ஒருவரை காதலித்து வருவதாகவும், அவர் தென் இந்திய அணிக்காக விளையாடி வருவதாகவும் விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் பேச்சுக்கள் எழுந்துள்ளது. ஆனால் இதுகுறித்து எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை மேலும் இவரது ரசிகர்கள் எந்த கிரிக்கெட் வீரராக இருப்பார் என்று மண்டையை பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.