பிரபல தென்னிந்திய திரைப்பட நடிகை கிஷோரி பல்லால் தனது 82வது வயதில் காலமானார்.
கன்னட திரைப்படங்கள் பலவற்றில் அம்மா வேடங்களில் நடித்து புகழ்பெற்ற கிஷோரி பெங்களூரில் வசித்து வந்தார்.
இதோடு ஹிந்தி திரைப்படங்களிலும் கிஷோரி நடித்து வந்தார்.
பிரபல நடிகர் ஷாருக்கான் நடித்த ஸ்வதீஸ் என்ற திரைப்படத்தில் அவரின் அம்மாவாக கிஷோரி நடித்த நிலையில் அவரின் சிறப்பான நடிப்பு பெரியளவில் பேசப்பட்டது. திரைப்படங்கள் மட்டுமின்றி தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்திருக்கிறார் கிஷோரி.
இந்நிலையில் வயது முதிர்வால் ஏற்பட்ட உடல்நலக்கோளாறு காரணமாக பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கிஷோரி அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அங்கு சிகிச்சை பலனின்றி அவரின் உயிர் செவ்வாய்கிழமை இரவு பிரிந்தது.
கிஷோரியின் மறைவுக்கு திரையுலகை சேர்ந்த முன்னணி நடிகர்களும், ரசிகர்களும் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Veteran artist Kishori Ballal amma is no more, RIP
— Puneeth Rajkumar (@PuneethRajkumar) February 18, 2020