தாம் கழுகு போன்று தாக்குவேன் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவையில் இடம்பெற்ற தேர்தல் முன்னோட்ட பிரசாரத்தின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
தாம் காலையில் நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது நீர்க்காகம் ஒன்று குளத்தில் இருந்து மீன் ஒன்றை கவ்விக்கொண்டு ஒரு பாறையில் அமர்ந்து உண்ண ஆரம்பித்தது.
இதன்போது ஏற்கனவே அதனை வானத்தில் இருந்து நோட்டமிட்டுக்கொண்டிருந்த கழுகு ஒன்று உடனடியாக கீழே வந்து நீர்க்காகத்திடம் இருந்து மீனை பறித்து சென்றது.
இந்த கழுகைப்போன்றே தாமும் தாக்குதல் நடத்தி எதிர்வரும் பொதுத்தேர்தலில் வெற்றி பெறப்போவதாகவும், பொலன்னறுவையில் இருந்து அரசியல் செய்வோர் எப்போதும் தோல்வியடைந்ததில்லை என்றும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.