பிரான்சில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் ஒருவர் கொரோனாவால் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
மரணமடைந்தவர் Compiègne பகுதியைச் சேர்ந்த அவசர பிரிவு மருத்துவர் ஆவார், குறித்த பகுதியானது கொரோனா வைரஸால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டின் முதல் பிராந்தியங்களில் ஒன்றாகும்.
பிரான்சில் கொரோனா பாதிப்புக்கு இதுவரை 14,459 பேர் இலக்காகியுள்ளனர். சுமார் 1500-கும் மேற்பட்டவர்கள் குணமடைந்து குடியிருப்புகளுக்கு திரும்பியுள்ளனர்.
இதுவரை கொரோனா பாதிப்பால் சிகிச்சை பலனின்றி 562 பேர் மரணமடைந்துள்ளதாக பிரெஞ்சு சுகாதார அமைச்சர் Olivier Véran தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி நாட்டில் கொரோனாவுக்கு பலியாகும் முதல் மருத்துவரும் இவரே என சுகாதார அமைச்சர் Olivier Véran குறிப்பிட்டுள்ளார்.