அவசரகால அனுமதி பத்திரம் பெற்றுக் கொள்வதற்காக போலி ஆவணம் சமர்ப்பிப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “கொவிட் 19 வைரஸ் தொற்றினால் உயிரிழந்தால் அந்த நபரின் இறுதி சடங்கிற்காக சடலத்தை எடுத்து செல்லும் பிரதேசங்களுக்கு பொதுமக்கள் ஒன்றுகூவார்களாயின் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அவசர நோய் நிலமை ஏற்பட்டால் எத்தகைய வாகனங்களிலும் செல்ல முடியும். இதற்கு ஊரடங்கு சட்ட அனுமதி பத்திரம் தேவையில்லை.
பொலிஸாரினால் வழங்கப்படும் ஊரடங்கு சட்ட அனுமதிப்பத்திரம் முறைகேடாக பயன்படுத்தப்படுவதாக தகவல் கிடைத்துள்ளதுடன் இது தொடர்பாக புலனாய்வு பிரிவை பயன்படுத்தி விசாரணை மேற்கொள்ளப்படும்.
இதே போன்று அவசரகால அனுமதி பத்திரம் பெற்றுக் கொள்வதற்காக போலி ஆவணம் சமர்ப்பிப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளபடும்“ எனத் தெரிவித்துள்ளார்.