கொரோனா வைரஸ் பெரியளவில் அமெரிக்காவில் பரவி வரும் நிலையில் அதன் காரணமாக லட்சக்கணக்கானோருக்கு ஏற்பட்டுள்ள வேலை இழப்புகள் பெரிய சமூக பிரச்சனையாக எழுந்துள்ளது.
சீனாவில் தொடக்கத்தை கண்ட கொரோனா வைரஸ் உலகளவில் பல நாடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் கொரோனாவால் இதுவரையில் 311,637 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த கொடிய வைரஸுக்கு அந்நாட்டில் இதுவரை 8,454 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் அமெரிக்காவில் மார்ச் மாதத்தில் விவசாயமல்லாத துறைகளில் சுமார் 7 லட்சம் பேர் வேலையிழந்து அவதிப்பட்டு வருகின்றனர். கொரோனாவின் காரணமாக வேலையிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்த அளவானது 1975 ஆண்டுக்கு பிறகு அதிகமாகும். கொரோனா வைரஸ் காரணமாக பல நிறுவனங்கள் முன்கூட்டியே தங்கள் வியாபாரத்தை நிறுத்தியதே இந்த வேலையிழப்புக்கான காரணமாகக் கூறப்படுகிறது.
வீடுகளின்றி வீதியில் வசிக்கும் சுமார் 6 லட்சம் பேருக்கு நோய்த் தொற்று ஏற்படும் வாய்ப்பு கணிசமாக உயர்ந்துள்ளது.



















