கொரோனாவின் கோரப்பிடியில் உலகமே அடங்கி கிடக்கின்ற வேளையில் கனடாவில் வாழும் ஈழத்துபெண்மணி ஒருவர் தன் செல்லப்பிராணியான நாயுடன் பேசும் காணொளி ஒன்று சமூகவலைத்தளங்களில் பரவிவருகின்றது.
ஆளரவமற்ற வெளியில் அந்நாய் படுத்திருக்க அதனை வீட்டிற்கு வருமாறு அதன் எஜமானி கெஞ்சி அழைக்கின்றார்.
எனினும் அதனை செவிமடுக்காத அந்த நாய் அப்படியே படுத்திருக்கின்றது.
அதன் பின்னர் வெளியில் போவோம் என அவர் கூறியதும் துள்ளிக்கொண்டு எழுந்து செல்கின்றது அந்த நாய்.