பீஜிங்: உலகம் முழுக்க கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த வேளையில் சீனாவில் இருந்து எவ்வாறு கொரோனா வைரஸ் மற்ற நாடுகளுக்குப் பரவியது, வூஹானில் ஆராய்ச்சிக் கூடத்தில் இருந்து கொரோனா வைரஸ் எப்படி கசிந்தது என்ற விசாரணை நடைபெற்ற வண்ணம் உள்ளது.
வூஹான் வைராலஜி லேப்பில் இருந்து விஞ்ஞானிகள் கவனக்குறைவால் கொரோனா வைரஸ் உலகுக்குப் பரவியது என்ற பேச்சு கடந்த சில நாட்களாக உலக மீடியாக்களில் அடிபட்டுக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால் இதற்கு நம்பத்தகுந்த ஆதாரங்கள் இல்லை. சீனா மீது அமெரிக்க மீடியாக்கள் வீண்பழி சுமத்துகின்றன என கூறப்படுகிறது.
அமெரிக்காவும் சீனாவும் இந்த விஷயத்தில் மாற்றி மாற்றி குற்றம் சுமத்தி வருகின்றனர். இதுகுறித்த விசாரணை நடந்துகொண்டு இருக்கிறது என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ சீனா இந்த விஷயத்தில் உண்மையா மறைப்பதாகவும் நடந்ததை ஏற்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
வூஹான் பரிசோதனை கூடத்தில் பரிசோதனை செய்யப்பட்ட வெளவால்கள் அருகில் உள்ள யுனான் இறைச்சி மார்கெட்டில் விற்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் யுனாமன் வியாபாரிகள் கூறுகையில் வெளவால்களை மார்கெட்களில் விற்பதில்லை மேலும் உணவு விடுதிகளில் சமைப்பதும் இல்லை எனத் தெரிவித்துள்ளனர். ஆக, வூஹான் பரிசோதனை கூடத்தில் நடந்தது என்ன, கோவிட்-19 எவ்வாறு பரவியது என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது.
மறுபுறம் உலக பொருளாதாரத்தை முடக்க கொரோனா வைரஸ் திட்டமிட்டு சின அரசால் பரப்பப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. ஆனால் இதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. பாம்பியோ தனது உரையில் சீனா அமெரிக்கா மீது உயிரியல் போர் தொடுக்க கொரோனா வைரஸை பரப்பவில்லை என்றாலும் வேறு ஒரு காரணம் உள்ளது என்றார்.
அமெரிக்க விஞ்ஞானிகளைக் காட்டிலும் சீன விஞ்ஞானிகள் வைரஸ் சோதனையில் தலைசிறந்தவர்கள் எனக் காட்டிக்கொள்ள மடத்தனமாக சோதனை மேற்கொண்டுள்ளனர். இவர்களது அஜாக்கிரதையின் காரணமாகவும் பாதிகாப்பின்மையினாலும் வைரஸ் வெளியே கசிந்துள்ளது எனக் குற்றச்சாட்டி உள்ளார்.
எது எப்படியோ தற்போது கொரோனா எவ்வாறு கசிந்தது என்பதை சோதனை செய்வதைக் காட்டிலும் கொரோனாவை உலக நாடுகளில் இருந்து முற்றிலுமாக ஒழிக்கவேண்டும் என்பதே அனைவரது விருப்பமாக உள்ளது.