பிரபல நகைச்சுவை நடிகரான இமான் அண்ணாச்சி ஏழைகளுக்கு தானே பிரியாணி சமைத்துக் கொடுக்கும் வீடியோ வெளியாகி பலரது பாராட்டுகளை பெற்றுள்ளது.
இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு மே 3ம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் அன்றாட கூலி வேலைக்கு செல்பவர்கள், தெருவோரத்தில் வசிக்கும் மக்கள் சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டு வருகின்றனர்.
அம்மக்களுக்கு தன்னார்வலர்கள், பிரபலங்கள் பலரும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இணைந்த கைகள் அறக்கட்டளையும், கலாம் அறக்கட்டளையும் இணைந்து தினமும் 300 பேருக்கு மதிய உணவு வழங்கும் திட்டம் தயாரானது.
இதில் தன்னை இணைத்துக் கொண்ட இமான் அண்ணாச்சி தானே பிரியாணி செய்து, சென்னையில் வசிக்கும் ஆதரவற்றவர்களுக்கு வழங்கி வருகிறார்.
இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பலரது பாராட்டுகளை பெற்றுள்ளது.
அதில் இமான் அண்ணாச்சி, பிரியாணியை, அண்டாவில் வைத்து கிளறும் காட்சிகளும், பிறகு அவற்றை, முதியோருக்கு வழங்கும் காட்சிகளும் உள்ளன.