கொரோனா வைரஸ் காரணமாக உலக நாடுகள் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், சீனாவை சுற்றி நான்கு நாட்டு போர் கப்பல்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருவது அப்பகுதியில் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக உலகின் பல்வேறு நாடுகள் பாதிக்கப்பட்டிருந்தாலும், இந்த நோய் காரணமாக அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு இடையே கடுமையான பிரச்சனை உருவாகியுள்ளது.
ஏனெனில், சீனாவில் இந்த வைரஸ் முதலில் அடையாளம் காணப்பட்டது. இந்த கொரோனா வைரஸ் பரவ சீனாதான் காரணம் என்று அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது.
இதை விரைவில் விசாரிக்க போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இதனால் சீனா மற்றும் அமெரிக்கா இடையிலான சண்டை விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இந்நிலையில் இன்னொரு பக்கம் புதிய சண்டை நடந்து வருகிறது. சீனாவின் தென் கடல் எல்லையை யார் சொந்தம் கொண்டாடுவது என்று சண்டை நடந்து வருகிறது.
இது பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் சண்டை என கூறப்படுகிறது. இந்த கடல் தனக்குத்தான் சொந்தம் என்று சீனா கூறுகிறது.
அதே சமயம் இந்த கடலை ஒரு பக்கம் மலேசியா சொந்தம் கொண்டாடுகிறது. இன்னொரு பக்கம் வியட்நாம் சொந்தம் கொண்டாடுகிறது.
இத்தனை நாட்கள் இந்த கடல் எல்லையில் எல்லா மீறிய போதெல்லாம் அமெரிக்கா சீனாவை தட்டி வைத்தது. இதனால் தென் சீன கடல் எல்லையில் பெரிய அளவில் எதுவும் பதற்றம் வந்தது இல்லை.
இந்த நிலையில் முதல் முறையாக தென் சீன கடல் எல்லையில் போர் பதற்றம் ஏற்பட தொடங்கி உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக இந்த கடல் எல்லைக்குள் சீனாவின் Haiyang Dizhi போர் கப்பல்கள் சென்று ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த விஷயம் தெரிந்ததும் அமெரிக்கா தனது USS Bunker Hill மற்றும் USS Barry எனப்படும் போர் கப்பல்களை சீன எல்லைக்கு அனுப்பி வைத்தது.
அமெரிக்காவுடன் மலேசியாவின் போர் கப்பல்களும் கூட்டு சேர்ந்தது. பின் வியட்நாம் போர் கப்பலும் அமெரிக்காவுடன் சேர்ந்து தற்போது அங்கே ரோந்து பணிகளை கவனித்து வருகிறது. தற்போது அமெரிக்க கப்பலுடன் அவுஸ்திரேலியாவின் சக்தி வாய்ந்த போர் கப்பலும் இணைந்துள்ளது.
அவுஸ்திரேலிய போர் கப்பலுக்கு இதற்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை. ஆனாலும் இந்த கடல் எல்லை அவுஸ்திரேலியாவிற்கு முக்கியம் கிடையாது. இருப்பினும், அமெரிக்காவிற்கு அவுஸ்திரேலியா உதவ காரணம் இருக்கிறது.
கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார சரிவு காரணமாக அவுஸ்திரேலியாவில் இருக்கும் நிறுவனங்கள் சிலவற்றை சீனா வாங்கியுள்ளது.
இதனால் சீனா மீது அவுஸ்திரேலியா கடும் கோபத்தில் இருக்கிறது. இதற்கு எதிராக அவுஸ்திரேலியா சட்டம் கொண்டு வந்துள்ளது.
இந்த நிலையில்தான் தற்போது சீனாவை அடக்கும் விதமாக அமெரிக்காவிற்கு உதவ அவுஸ்திரேலியா முடிவு செய்துள்ளது. இதனால் அவுஸ்திரேலியாவின் இரண்டு போர் கப்பல்கள் சீனாவிற்கு எதிராக களமிறக்கி உள்ளது.
சீனாவை சுற்றி இப்படி நான்கு நாட்டு போர் கப்பல்கள் ரோந்து செல்வது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.