கொரோனா காரணமாக பிரபல நடிகை மாளவிகா மோகனின் சகோதரர் பயத்துடன் லண்டனில் சிக்கி தவிக்கிறார் என தெரியவந்துள்ளது
தமிழில் பேட்ட, மாஸ்டர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் மாளவிகா மோகனன். இவரின் தம்பி ஆதித்யா (22) லண்டனில் தங்கி கல்லூரி படிப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் கொரோனா காரணமாக ஆதித்யா அங்கு சிக்கி தவிப்பது மாளவிகாவை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
இது குறித்து மாளவிகா கூறுகையில், ஆதித்யா வாடகை குடியிருப்பில் வசித்து வருகிறான். ஒரு படுக்கையுடன் கூடிய சிறிய அறையில் தான் தங்கியுள்ளான்.
ஆதித்யாவுடன் இருந்த பிற நாடுகளைச் சேர்ந்த பல மாணவர்கள் தங்கள் நாட்டுக்கு சென்றுவிட்டதால் அவர் தனியாக இருக்கிறார்.
நிச்சயமற்ற தன்மையால் அவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார். அறையில் சமையல் செய்வதற்கான வாய்ப்புகள் இல்லை.
ரெஸ்டாரன்ட்களில் ஆர்டர் செய்து சாப்பிடுவது பாதுகாப்பானதாக இருக்காது என்பதால், கடந்த ஒரு மாதமாக, டப்பாக்களில் அடைக்கப்பட்ட உணவுகளை சாப்பிட்டு வருகிறார். அங்கு எங்களுக்கு எந்த உறவினர்களும் இல்லை. அதனால் அவரது உடல் மற்றும் மனநிலை குறித்து கவலையாக இருக்கிறது என கூறியுள்ளார்.
லண்டனில் உள்ள ஆதித்யா கூறுகையில், இந்தியாவுக்கு உடனடியாக வர விரும்பியும் அங்கு முழு லாக்டவுனால் வர முடியவில்லை.
இது தொடர்பாக இந்திய தூதரகத்துக்கு தினமும் பல இமெயில்கள் அனுப்பப்படுகிறது.
முக்கிய தேவைகளுக்கு அவர்கள் உதவி செய்ய வேண்டும். ஒரு சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இங்கு சிக்கியுள்ள இந்திய பிரஜைகளுக்கு உதவுகின்றன என கூறியுள்ளார்.




















