பிக்பாஸ் புகழ் நடிகை ரேஷ்மா தனது மகனுடன் எமோஷனலான காணொளி ஒன்றினை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அவரது மகன் அவருக்கு காபி போட்டு எடுத்து வந்து கொடுக்கும் வீடியோவை விஸ்வாசம் கண்ணான கண்ணே பாடலுடன் இணைத்து அவர் பதிவிட்டுள்ளார்.
மேலும், ”இது எனது மகன் ராகுல். கடந்த இரண்டு தினங்கள் எனக்கு ரொம்பவே கடினமான ஒன்றாக இருந்தது.
அதனால் என்னை ஆச்சர்யப்படுத்தி, மீண்டும் சிரிக்க வைக்க அவன் இப்படி செய்திருக்கிறான்” என மகனின் பாச செயல் குறித்து பதிவிட்டிருக்கிறார்.
ரேஷ்மா வெளியிட்ட இந்த காணொளியை பார்த்த ரசிகர்கள் விஸ்வாசத்தின் அப்பா – மகள் பாசத்தையே மிஞ்சி விட்டதாக பதிவிட்டுள்ளனர்.