ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை குறிவைத்து ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுமார் 3 ராக்கெட்டுகள் விமான நிலையத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. எனினும், ராக்கெட்டுகள் விமான நிலையத்திற்கு அருகே தாக்கியதாக உள்ளுர் ஊடகம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும், குண்டுவெடிப்பை தொடர்ந்து பாக்தாத் விமான நிலைத்திற்கு அருகே கடும் விமான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
https://twitter.com/Brothersirq/status/1257867364890271747
இந்த தாக்குதலில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என அந்நாட்டு இராணுவம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ராக்கெட் லாஞ்சர் கதிமியா சுற்றுப்புறத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இத்தாக்குதலுக்கு தற்போது வரை யாரும் பொறுப்பேற்கவில்லை, எனினும், தாக்குதல் தொடர்பில் ஈராக் அதிகாரிகள் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
"Katyusha" Rocket launcher reportedly used in the attack found in the Kadhimiya Neighborhood, #Baghdad, #Iraq. pic.twitter.com/vAbBai2P1g
— Aurora Intel – #StayHome (@AuroraIntel) May 6, 2020