பிரபல தொகுப்பாளினி டிடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மேக்கப் இல்லாமல், தனது கருவிழியினை பச்சையாக மாற்றி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
சமீபத்தில் தனது இடது காலில் கட்டுப்போட்டிருந்த டிடி-யின் புகைப்படம் ரசிகர்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியது.
இந்நிலையில் மேக்கப் இல்லாமல் டிடி புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார். இதில் அவர் தனது கண்களை பச்சை நிறமாக மாற்றி பதிவிட்டு, இந்த புகைப்படத்தினை விரைவில் அழித்துவிடுவேன், நல்லா இல்லாதது போன்று காணப்படுகின்றது இந்த மாற்றம் என்று கூறியுள்ளார்.
இதனை அவதானித்த ரசிகர்கள் சூப்பர் என்று புகழ்ந்து தள்ளியதோடு, அவரது கால் சரியாகிவிட்டதா என்று நலம் விசாரித்தும் வருகின்றனர்.