இலங்கையில் நேற்று கண்டறியப்பட்ட 21 கொரோனா தொற்றாளிகளும் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வந்தவர்கள் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
இதில் 16பேர் குவைத்தில் இருந்தும், இரண்டுபேர் கட்டாரில் இருந்தும், இரண்டுபேர் லண்டனில் இருந்தும் வந்தவர்களாவர்.
ஒருவர் பங்களாதேஷில் இருந்த வந்தவர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை கொரோனதொற்றில் இருந்து குணமான 49பேர் இன்று வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இதனையடுத்து கொரோனா தொற்றில் இருந்து குணமானோரின் மொத்த எண்ணிக்கை 990ஆக உயர்ந்துள்ளது.
தொடர்ந்தும் 834பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
அதேவேளை கொரோனதொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 1835ஆக உயர்ந்துள்ளது.