லண்டனில் குடோனில் வைக்கப்பட்டிருந்த அதிக விலைமதிப்பு கொண்ட குங்குமப்பூவை கொள்ளையர்கள் திருடி சென்ற சிசிடிவி காட்சியை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.
லண்டனின் Ilford பொலிசார் வெளியிட்டுள்ள சிசிடிவி வீடியோ காட்சியில், ஒரு பெரிய குடோனுக்குள் மூன்று கொள்ளையர்கள் நுழைகிறார்கள்.
பின்னர் $60,000 மதிப்புள்ள குங்குமப்பூவை அவர்கள் திருடி செல்வது போல உள்ளது.
இந்த சம்பவம் குறித்து பொலிசார் கூறுகையில், இது தங்கத்தின் எடையை விட மதிப்பு அதிகம் என்று கூறுகிறார்கள்.
குங்குமப்பூவின் விலை மிகவும் அதிகம் ஏனெனில், தீவிர அறுவடை முறை மூலமே அதை எடுக்க முடியும்.
மேலும் கர்ப்பிணி பெண்களுக்கு கூட இதை கொடுப்பார்கள். இதோடு ஸ்பானிஷ், மொராக்கோ மற்றும் பாரசீக உணவுகளில் குங்குமப்பூ பரவலமாக பயன்படுத்தப்படுகிறது.




















