ஜீவன் தொண்டமானை நான் எப்போதும் கைவிட மாட்டேன் என காபந்து அரசின் முதன்மை அமைச்சர் மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.
ஹட்டனில் நடைபெற்ற பிரசாரத்தில் தமிழில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் தனது உரையில் தெரிவித்ததாவது,
“அன்பர்களே..! நண்பர்களே..! உங்கள் எல்லோருக்கும் வணக்கம். இன்று இந்த மேடையில் காலம் சென்ற ஆறுமுகம் தொண்டமான் இல்லை. அது எனக்கு மனவருத்தம் உங்களுக்கும் மனவருத்தம்.
ஆனால் அவருக்கு பதிலாக அவரது மகன் ஜீவன் தொண்டமான் இப்போது இங்கே இருக்கிறார். நான் ஒருநாளும் ஜீவன் தொண்டமானை கைவிட மாட்டேன்.
அதேபோல உங்களையும் கைவிட மாட்டேன் இது நிச்சயம்!
இந்த தேர்தல் முடிந்த பிறகு இந்த மலையக பகுதிகளில் நாம் தான் ஆளப்போகின்றோம் என்று சிலர் சொல்றார்கள்.
யார் என்ன சொன்னாலும், எதை சொன்னாலும், எப்படி சொன்னாலும், தொண்டமான் பெயர் தான் இங்கே இருக்கும் இது நிச்சயம்! இதை யாரும் மாற்ற முடியாது நாங்கள் மாற்றவும் விடமாட்டோம்.
நான் உங்கள் சொந்தக்காரன் நான் உங்கள் வீட்டுப்பிள்ளை நான் உங்களை ஒருநாளும் மறக்க மாட்டேன். இது நிச்சயம்! உங்களின் சின்னம் மொட்டு சின்னம்! வெற்றியின் சின்னம் மொட்டு சின்னம்!
நாளை நமதே இந்த நாளும் நமதே! என அவர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.