அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர்களின் எண்ணிக்கை முக்கியம் அல்ல, அரசாங்கம் நாட்டு மக்களுக்கு செய்யும் சேவையே முக்கியமானது என பிரதமர் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.
கொழும்பில் செய்தியாளர்களுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,
உலகத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் காரணமாக எதிர்வரும் காலம் மிகவும் சவால்கள் நிறைந்த காலமாக இருக்கும்.
இதனால் ஸ்திரமற்ற அரசாங்கத்திற்குள் இருந்துக்கொண்டு அந்த சவால்களை எதிர்கொள்ள முடியாது. ஸ்திரமான அரசாங்கத்தை அமைக்க எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுக்கும். இதனை வெற்றிகரமாக மேற்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை எமது தரப்பினருக்கு இருக்கின்றது.
எனினும் தனித்து ஸ்திரமான அரசாங்கத்தை அமைப்பதில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால், ஸ்திரமான அரசாங்கத்தை அமைக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமை, தாங்கும் கூட்டணி அரசாங்கத்தை அமைக்க நேரிடும் என அவர் சூசகமாக குறிப்பிட்டுள்ளார்.