தைவான் நாட்டின் முன்னாள் அதிபரும் அந்நாட்டில் ஜனநாயகத்தை மீட்டெடுக்க காரணமாக இருந்தவருமான லீ டெங்-ஹுய், உடல்நலக்குறைவால் தனது 97 ஆவது வயதில் காலமானார்.
இரண்டாம் உலகப்போருக்கு முன்னர் ஜப்பானின் ஆளுகையில் இருந்த தைவான், உலகப்போருக்கு பின்னர் சீனாவில் ஆளுகைக்கு கீழ் வந்தது. இதனை தொடர்ந்து தைவானை தனது நாட்டுப்பகுதிகளில் ஒன்று என சீனா கூறிவந்தது. இதற்கிடையே 1923 ஆம் ஆண்டு தைவானில் பிறந்து ஜப்பானில் கல்வி கற்ற லீ டெங்-ஹுய், மீண்டும் தைவானுக்கு திரும்பி 1988 ஆம் ஆண்டு தைவானில் அதிபரானார்.
இதனை தொடர்ந்து இவர் ஆட்சி செய்த 1988-2000 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டங்களில் சீனா கம்யூனிஸ்ட் கட்சியை எதிர்த்து தைவானில் பல்வெறு சீர் திருத்தங்களை கொண்டுவந்தார்.
மேலும் பல தசாப்தங்களாக ஒரு கட்சி சர்வாதிகாரத்திற்குப் பிறகு தைவான் ஒரு நவீன, சுதந்திர சமுதாயமாக மாற வழி வகுத்த லீ டெங்-ஹுய், சர்வதேச அளவில் தைவானை ஒரு இறையாண்மை கொண்ட அரசாக மாற்ற மேற்கொண்ட தீவிர முயற்சியில் வெற்றியும் கண்டார்.
இதனால் லீ டெங்-ஹுய் Mr.Democracy (ஜனநாயகம்) என மக்களால் அழைக்கப்பட்டார்.
இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த பிப்ரவரி முதல் லீ டெங்-ஹுய் மருத்துவமனையில் சிகிச்சப்பெற்று வந்தார். இதனிடையே ஏற்பட்ட மூச்சுத்திணறல் மற்றும் உடலுறுப்பு செயழிலப்பு காரணமாக நேற்று லீ டெங்-ஹுய் தனது 97 வயதில் உயிரிழந்தார்.
இதனை தைபே பொது மருத்துவமனையின் துணைத் தலைவர் ஹ்வாங் ஷின்-ஜாங் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதனிடையே முன்னாள் அதிபர் லீ டெங்-ஹுய் இன் இறப்பு தைவான் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.