அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் சகோதரரும் தொழிலதிபருமான ராபர்ட் ட்ரம்ப் தனது 71 வது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக நியூயார் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் இளைய சகோதரராகவும் தொழிலதிபராகவும் இருப்பவர் ராபர்ட் ட்ரம்ப். ட்ரம்ப் சகோதரர்களில் அதிபர் ட்ரம்புக்கு மிகவும் நெருக்கமாகவும் சிறந்த நண்பராகவும் ராபரட் ட்ரம்ப் இருந்துள்ளார். 71 வயதாகும் ராபர் ட்ரம்ப் கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதனிடையே நேற்று நியூயார்க் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனிடையே சகோதரரின் மறைவுக்கு இரங்கள் தெரிவித்துள்ள அதிபர் ட்ரம்ப், எனது அருமையான சகோதரர் ராபர்ட் இரவு நிம்மதியாக காலமானார் என்பதை நான் கனத்த இதயத்தோடு பகிர்ந்து கொள்கிறேன். அவர் என் சகோதரர் மட்டுமல்ல, அவர் எனது சிறந்த நண்பரும் ஆவார். அவர் எங்களை பெரிதும் தவறவிடுவார், ஆனால் நாங்கள் மீண்டும் சந்திப்போம். அவரது நினைவு எனது இதயத்தில் என்றென்றும் இருக்கும். ராபர்ட், நான் உன்னை நேசிக்கிறேன். நிம்மதியாக இருங்கள் என உருக்கமாக தெரிவித்துள்ளார்.