அலி சப்ரி நீதியமைச்சராக நியமிக்கப்பட்டிருப்பது அடிப்படைவாதிகளுக்கு பொறுத்துக்கொள்ள முடியாததாக இருப்பதாக இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மொஹமட் அலி சப்ரி, ஜனாதிபதியின் வழக்குகளுக்காக நீதிமன்றத்தில் ஆஜராகிய சட்டத்தரணி என்பதற்காக அவருக்கு புதிய நீதிமைச்சருக்கான பதவி வழங்கப்படவில்லை.
இவர் மக்கள் நலன சார்ந்த வழக்குகளிலும் ஆஜராகி இருப்பதாகவும் நாமல் ராஜபக்ச பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இவ்வாறு கூறியுள்ளார்.
குறிப்பாக கடந்த அரசாங்கத்தின் காலத்தில் பல்வேறு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் பிக்குமார் மற்றும் படையினருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்ட போது அலி சப்றி அவர்களுக்காக நீதிமன்றத்தில் ஆஜராகினார்.
ஜனாதிபதி சட்டத்தரணியும் தற்போதைய நீதியமைச்சருமான அலி சப்றி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிரான வழக்குகளில் ஆஜராகி வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.