தற்போதைய இயந்திர உலகில் மனிதர்களுக்கு பல நோய்கள் இலகுவாக தொற்றிக்கொள்கின்றன.
இதனால் அவர்களின் உடல் ஆரோக்கியத்தை கண்காணிக்கும் வசதியும் அதிகரிக்கப்பட்டு வருகின்றது.
தற்போது ஸ்மார்ட் சாதனங்களில் இதற்காக டூல்கள் வழங்கப்பட்டுவருகின்றன.
இவற்றில் இதயத்துடிப்பு வீதத்தினை அறியும் டூலும் ஒன்றாகும்.
இதனை ஸ்மார்ட் கடிகாரங்களிலும் பயன்படுத்தக்கூடியதாக இருக்கின்றது.
தற்போது உலக அளவில் உள்ள 60 சதவீதமான ஸ்மார்ட் கடிகாரங்களில் இதயத்துடிப்பு வீதத்தினை அறியும் டூல் காணப்படுவதாக ஆய்வுத் தகவல் ஒன்று தெரிவித்துள்ளது.
Counterpoint Research மேற்கொண்ட ஆய்விலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை இரத்தத்திலுள்ள ஒட்சிசனின் அளவினை அளவிடும் டூலும் ஸ்மார்ட் கடிகாரங்களில் அதிகளவில் தரப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.