நாட்டின் அனைத்து வீதிகளும் அடுத்த நான்கு ஆண்டுகளில் புனரமைக்கப்படும் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.
அத்துடன், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களின் கடமை மற்றும் பொறுப்புகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
பல மாவட்டங்களில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதன் மூலம் தேசிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதில் தீவிரமாகப் பங்களிக்குமாறு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர்களிடம் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.
மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் பதவிக்காக அமைச்சர்கள் அல்லாத இளம் பாராளுமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டிருப்பது அவர்களது முழு நேரத்தையும் அதற்காகச் செலவிடுவதற்கு என ஜனாதிபதி தெரிவித்தார்.
பல மாவட்டங்களுக்கு பொதுவான மற்றும் அவற்றுக்கு மாத்திரம் விசேடமான பிரச்சினைகளை அரசாங்கம் கண்டறிந்துள்ளது.
குடி நீர் மற்றும் நீர்ப்பாசன தேவைகள், நீர்ப்பாசன புனரமைப்பு, காட்டு யானைகள் கிராமங்களுக்கு வருதல், கல்வி மற்றும் சுகாதார பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதே அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாகும்.
நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நிலவரங்களை மறு ஆய்வு செய்வதற்கும், தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகளை வழங்கும் திட்டத்தை வகுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
2015 ஆம் ஆண்டு வரை, அரசாங்கத்தால் மேற்கொண்ட அபிவிருத்தி செயற்திட்டங்கள் பல நிறுத்தப்பட்டுள்ளன.
அடுத்து வரவு- செலவு திட்டத்தில் நிதியை ஒதுக்கீடு செய்து இடைநிறுத்தப்பட்டுள்ள அனைத்து நிர்மாணப் பணிகளும் நிறைவு செய்யவேண்டும் என பொருளாதார மறுமலர்ச்சிக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஏ.பி.சி.டி என வகைப்படுத்தப்பட்டுள்ள நாட்டின் அனை த்து வீதிகளையும் ஜனாதிபதியின் பதவிக்காலம் முடி வடைவதற்கு முன்னர் அபிவிருத்தி செய்வதற்குத் திட்ட மிடப்பட்டுள்ளது என பசில் தெரிவித்தார்.
ஜனாதிபதி எதிர்பார்க்கும் ஒத்துழைப்பை நாட்டின் அபி விருத்திக்கா முழுமையான அர்ப்பணிப்புடன் செய்பட தயாராகவுள்ளதாக மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் கள் உறுதியளித்துள்ளனர்.