அமெரிக்காவில் இடம்பெற்ற ‘Black Lives Matter’ போராட்டத்தில் கார் ஒன்று புகுந்த மக்கள் மீது மோதி தரதரவென இழுத்துச்சென்ற சம்பவம் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டைம்ஸ் சதுக்கத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கருப்பு கார் ஒன்று மோதிச் சென்ற சம்பவம் குறித்து நியூயார்க் பொலிஸ் விசாரணையைத் தொடங்கியுள்ளது.
சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வீடியோவில், டைம்ஸ் சதுக்கத்தில் மக்கள் ‘நீதி இல்லை, அமைதி இல்லை’ என்று கோஷமிடுவதைக் காட்டியது.
இதன் போது கருப்பு கார் ஒன்று கூட்டத்தின் ஊடாக மோதிச் செல்கிறது. இந்த சம்பவத்தில் பலருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், எந்தவொரு புகாரும் அளிக்கப்படவில்லை என்று பொலிசார் கூறியதுடன், காயமடைந்தவர்கள் புகார் அளிக்க முன்வருமாறு வலியுறுத்தியுள்ளனர்.
Car drives through protesters, Times Square, New York City, Thursday, September 3, 2020 pic.twitter.com/yMadwNYJSI
— DataInput (@datainput) September 4, 2020
மேலும், அந்த கருப்பு கார் நியூயார்க் பொலிஸிக்கு சொந்தமனாது என தகவல்கள் பரவி வருகின்றன. இந்நிலையில், அந்த கார் நியூயார்க் பொலிஸின் வாகனம் அல்ல என்று அதிகாரிகள் வலியுறுத்தினர்.