மலையாள உலகில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் மீரா நந்தன், தமிழில் வால்மீகி என்ற படத்தில் நாயகியாக அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து அய்யனார், காதலுக்கு மரணமில்லை, மற்றும் சண்டமாருதம் எனும் திரைப்படங்களில் இதுவரை நடித்து வந்துள்ளார்.
ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக படம் எதிலும் நடிக்காமல் ஒதுங்கி இருந்துள்ளார், இதற்கு காரணம் காதல் தோல்வி தான் என கூறப்படுகிறது.
பிரபல நடிகரை உருகி உருகி காதலித்து வந்த மீரா நந்தனை அந்த நடிகர் ஏமாற்றிவிட்டாராம், இதனால் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததே இதற்கு காரணமாகும்.
மேலும் தற்போது தான் அந்த காதல் தோல்வியில் இருந்து மீண்டு வந்துகொண்டு இருக்கிறேன் எனக்கூறும் மீரா நந்தன், கூடிய விரைவில் படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்துவேன் என்று கூறியுள்ளார்.