எதிர்வரும் வாரம் அமைச்சரவையில் மாற்றம் ஒன்று மேற்கொள்ளப்படும் என வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை பதவிகள் பலவற்றில் மாற்றம் ஏற்படவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர்கள் பலர் நியமிக்கபடவுள்ளதாக வெளியான தகவலை பிரதமர் நிராகரித்துள்ளார்.
இது தொடர்பில் கலந்துரையாடல் எதுவும் நடைபெறவில்லை என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய அமைச்சரவை மாற்றம் என்ற தகவல் அடிப்படையற்ற ஒன்றாகும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.