நாட்டில் நேற்று கொவிட்-19 தொற்றுறுதியான 724 பேரில் அதிகமானோர் கொழும்பு மாவட்டத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய கொழும்பு மாவட்டத்தில் நேற்றைய தினம் 197 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
கொவிட்-19 பரவல் தடுப்பு தேசிய செயற்பாட்டு மையம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்டத்தை தொடர்ந்து கண்டி மாவட்டத்திலும் கம்பஹா மாவட்டத்திலும் அதிகமானோருக்கு தொற்றுறுதியாகியுள்ளது.
இதற்கமைய கண்டி மாவட்டத்தில் 110 பேருக்கும் கம்பஹாவில் 106 பேருக்கும் நேற்று தொற்றுறுதியாகியுள்ளது.
இது தவிர குருநாகல் மாவட்டத்தில் 40 பேருக்கும், காலியில் 38 பேருக்கும், இரத்தினபுரியில் 31 பேருக்கும், களுத்துறையில் 28 பேருக்கும், மாத்தளையில் 27 பேருக்கும் கேகாலையில் 24 பேருக்கும் தொற்றுறுதியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கொழும்பு மாவட்டத்தில் இதுவரையில் 22,373 பேருக்கும் கம்பஹாவில் 11,986 பேருக்கும் களுத்துறை மாவட்டத்தில் 4 ஆயிரத்து 370 பேருக்கும் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.