நாட்டில் நேற்றைய தினம் 724 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.
பேலியாகொடை கொத்;தணியுடன் தொடர்புடைய 715 பேருக்கும், சிறைச்சாலை கொத்தணியில் 9 பேருக்கும் இவ்வாறு தொற்றுதியாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி நாட்டில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 57 ஆயிரத்து 587 ஆக அதிகரித்துள்ளது.
அதேநேரம் 8 ஆயிரத்து 48 கொவிட் 19 நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, நாட்டில் கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 49 ஆயிரத்தை கடந்துள்ளது.
நேற்று மேலும் 644 பேர் கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்ததை அடுத்து இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதன்படி நாட்டில் கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 49,261 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, வட மாகாணத்தில் நேற்று 6 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் எமது செய்தி பிரிவுக்கு குறிப்பிட்டார்.
அவர்களில் மூவர் வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவை சேர்ந்தவர்கள் எனவும் அவர் தெரிவித்தார்.