கம்பஹா – யக்கல வீதியில் வர்த்தக நிலையம் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள கைக்குண்டு, டி-56 ரக 38 தோட்டக்கள் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
காவல்துறை அதிரடிப்படைக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய நேற்று முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடம் இருந்து போலியாக தயாரிக்கப்பட்டுள்ள இரண்டு சாரதி அனுமதி பத்திரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.