ஓபராவுடனான நேர்காணலுக்கு இளவரசர் ஹரி மற்றும் மேகனுக்கு சிபிஎஸ் தொலைக்காட்சி நிறுவனம் எவ்வளவு பணம் செலுத்தியது என்பதை ஃபோர்ப்ஸ் வெளிப்படுத்தியுள்ளது.
Oprah Winfrey உடனான இளவரசர் ஹரி-மேகன் தம்பியின் நேர்காணல் ஞாயிற்றுக்கிழமை மாலை சிபிஎஸ் என்ற அமெரிக்க தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.
நேர்காணலில் அரச குடும்பம் குறித்து இளவரசர் ஹரியின் மனைவி மேகன் சரமாரியாக குற்றம்சாட்டியது சர்ச்சயை கிளப்பியுள்ளது.
சிபிஎஸ் நிறுவனம் இந்த நிகழ்ச்சிக்கான விளம்பரத்திற்கு 30 நொடிகளுக்கு 3,25,000 டொலர் கட்டணம் வசூலித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது வழக்கத்தை விட இரண்டு மடங்கு அதிகமாம்.
நேர்காணல் மீதுள்ள அதிகபடியான ஆர்வம் மற்றும் விளம்பத்திற்கான அதிக கட்டணம் காரணமாக சிபிஎஸ் நிறுவனம் இரண்டு மணி நேரத்திற்கு நிகழ்ச்சியை நீட்டியதாக கூறப்படுகிறது.
அதேசமயம், ஓபராவுடனான நேர்காணலுக்கு இளவரசர் ஹரி மற்றும் மேகனுக்கு சிபிஎஸ் நிறுவனம் 7 மில்லியன் டொலர் பணம் செலுத்தியதாக ஃபோர்ப்ஸ் வெளிப்படுத்தியுள்ளது.