அமெரிக்காவில் சிறிய விமானம் ஒன்று சாலையில் சென்றுக்ககொண்டிருந்து கார் மீது விழுந்து தீப்பற்றி எரிந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்து புளோரிடாவில் உள்ள Pembroke Pines நகரின் SW 72 அவென்யூ மற்றும் 12வது தெரு பகுதியில் நடந்தது என தீயணைப்பு துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
விபத்து குறித்து மத்திய விமானப்போக்குவரத்து ஆணையம் வெளியிட்ட தகவளின்படி, North Perry விமானநிலையத்திலிருந்து மதியம் 3 மணிக்கு புறப்பட்ட Beechcraft Bonanza விமானம், சிறிது நேரத்திலே சாலையில் விழுந்து விபத்துக்குள்ளானது.
சிசிடிவி காட்சியில், சாலையில் சென்று கொண்டிருக்கும் கார் மீது திடீரென விழுந்த விமானம், பயங்கரமாக தீப்பற்றி எரிவதை காட்டுகிறது.
இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த இருவரும் சம்பவயிடத்திலேயே உயிரிழந்துள்ளனர். எனினும், அவர்கள் யார் என்ற விவரம் தற்போது வரை வெளியாகவில்லை.
மேலும், காருக்குள் இருந்து மீட்கப்பட்ட பெண்ணும் சிறுவனும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிறுவனம் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.