ஜேர்மனி, ஹாலந்து, அயர்லாந்து உள்ளிட்ட பல நாடுகள் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிக்கு தடைவிதித்துள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றிய தடுப்பூசி நிர்வாகத் தலைவர்கள் ரஷாவிடன் கெஞ்சும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ரஷ்யாவின் ஸ்பூட்னிக் வி தடுப்பூசியை ஐரோப்பிய நாடுகளில் தயாரித்து, தங்களின் தற்போதை சூழலில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்றே ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
உலகில் முதன் முறையாக கொரோனா தடுப்பூசியை அறிமுகம் செய்த நாடு ரஷ்யா. ஆனால் ரஷ்யாவின் ஸ்பூட்னிக் வி தடுப்பூசி தொடர்பில் ஐரோப்பிய நாடுகள் கேலி செய்ததுடன், அதன் நம்பகத்தன்மை குறித்தும் கேள்வி எழுப்பினர்.
தற்போது அதே தடுப்பூசியால் தங்கள் மக்களை காப்பாற்ற வேண்டும் என ரஷ்யாவிடம் கெஞ்சும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பிரித்தானியாவின் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியால் ஐரோப்பிய நாடுகளில் சிலருக்கு ரத்தம் உறைதல் பிரச்சனை ஏற்பட்டுள்ளதுடன், சிலர் மரணமடைந்த சம்பவமும் ஜேர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட முக்கிய ஐரோப்பிய நாடுகளை சிந்திக்க வைத்துள்ளதுடன், அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி வழங்குவதை உடனடியாக தடுத்து நிறுத்தவும் செய்துள்ளனர்.
மட்டுமின்றி, பல ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவின் ஸ்பூட்னிக் வி தடுப்பூசியை பயன்பாட்டுக்கு அனுமதி அளித்துள்ளனர்.
இதனிடையே இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் ஜேர்மனி நாடுகளில் ஸ்பூட்னிக் வி தடுப்பூசியை தயாரிக்கும் நடவடிக்கைகள் கூடிய விரைவில் முன்னெடுக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் ஐரோப்பிய ஒன்றியம் அனுமதி அளிக்கும் என்றால், 27 நாடுகள் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தில் பயன்பாட்டுக்கு வரும் மேற்கத்திய நாடுகளின் தயாரிப்பல்லாத தடுப்பூசி ஸ்பூட்னிக் வி என்ற பெருமையை ரஷ்யா தட்டிச்செல்லும்.