தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டங்களில் ஹீரோவாக நடித்து வந்த நடிகர் ஒருவருக்காக அவரை காதலித்து நடிகை ஒருவர் மொட்டை அடித்துக் கொண்ட சம்பவம் சமீபத்தில் தான் தெரிய வந்துள்ளது.
சினிமாவில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்குள் காதல் வருவது ஒன்றும் புதிதல்ல. ஆனால் அவர்கள் திருமணம் செய்து கொள்வது தான் கேள்விகுறியாக உள்ளது.
ஆனால் தற்போது அவ்வாறு காதலித்து திருமணம் செய்து கொண்டாலும், நிலைக்காமல் சில வருடங்களுக்குள் பிரிந்து விடுகின்றனர்.
அந்த வகையில் பிரபல ஜோடியாக இருந்தவர்கள் தான் பார்த்திபன் மற்றும் சீதா. முதல் படத்திலேயே இருவருக்குள்ளும் காதல் ஏற்பட்டு பின்னர் திருமணம் செய்து கொண்டு தற்போது விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
ஆனால் ரசிகர்களால் இன்றும் ரசிக்கப்படும் ஜோடிகளாக இருக்கும் பார்த்திபன் மற்றும் சீதா இருவரும் பிரிந்தது பலருக்கும் சோகமான விஷயம்தான்.
ஆனால் அவர்களது காதல் காலங்களில் பார்த்திபனுக்காக சீதா மொட்டை போட்ட செய்தியை பார்த்திபனின் குருவும், நடிகருமான பாக்யராஜ் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
ஒருமுறை இயக்குனர் பார்த்திபனுக்கு நிற்காமல் விக்கல் எடுத்துக் கொண்டே இருந்ததாம். பல மருத்துவர்களை பார்த்தும் அந்த விக்கலை சரி பண்ண முடிய வில்லையாம். அதனால் பயந்து போன சீதா உடனடியாக சுவாமியிடம் வேண்டிக் கொண்டு மொட்டை போட்டு விட்டாராம்.
இதனை ஒருமுறை பாக்கியராஜ் பார்த்துவிட்டு அதிர்ச்சி அடைந்து விட்டதாகவும், ஏன் என்று கேட்டபோது பார்த்திபன் கூறிய விளக்கத்தைக் கேட்டு இப்படியொரு மனைவியா என ஆச்சரியப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இப்படி காதலுடன் இருந்த தம்பதி பிரிந்து போனது எப்படி என்று ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.