5 ஸ்டார் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை கனிகா. சேரன் நடித்த ஆட்டோகிராப், அஜித் நடித்த வரலாறு உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து பிரபலமானார்.
தொடர்ந்து பின்னணி பாடகி, தொகுப்பாளினி என பலதுறைகளிலும் அசத்தி வந்தாலும், படவாய்ப்புகள் இல்லாமல் இருந்ததால், குடும்பத்துடன் கேரளாவில் செட்டில் ஆனார்.
இவருக்கு திருமணமாகி 10 வயதில் மகன் இருந்தாலும், உடற்பயிற்சிகளின் மூலம் உடம்பை செம பிட்டாக வைத்துள்ளார்.
எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் கனிகா, வெளியிட்ட ஒற்றை புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
தற்போதைய இளம் நடிகைகளுக்கே கடும் போட்டியாக இருக்கிறார் என ரசிகர்கள் புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.
சமீபத்தில் கூட மாலத்தீவுக்கு சென்ற போது பிகினி உடையணிந்த படங்களை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.