யாழ்.புங்குடுதீவு – குறிகட்டுவான் இறங்குதுறையில் வீதி அபிவிருத்தி சபைக்கு சொந்தமான பாதை படகு திருத்த பயணியில் ஈடுபட்டிருந்த கடற்படை சிப்பாய் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கின்றார்.
கடந்த ஒருவார காலமாக மேற்கொள்ளப்பட்டுவரும் குறித்த திருத்த பணியில் இன்றைய தினம் குறித்த கடற்படை சிப்பாய் நீரில் இறங்கி பணியாற்றிக் கொண்டிருந்த நிலையில் மின்சாரம் தாக்கியிருக்கின்றது.
உடனடியாக புங்குடுதீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ஊர்காவற்றுறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டபோதும் அவர் உயிரிழந்துள்ளார்.