பெய்ஜிங்- 2012ல் சீனாவில் உள்ள குகை ஒன்றில் நடந்த சம்பவம் ஒன்று தான் கோவிட் வைரஸ் பரவலுக்கு தொடக்கமாக இருக்கும் என்று சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து பல அமெரிக்க, அவுஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் சந்தேகம் எழுப்பி உள்ளனர்.
ஏப்ரல் 2012,சீனாவின் யுன்னான் பகுதியில் உள்ள டுகுவான் நகரத்தில் 6 பேருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. உடல்வலி, மூச்சு விடுவதில் சிரமம், தொண்டை வலி, இருமல் என்று இந்த 6 பேருக்கும் கடுமையான காய்ச்சல் இருந்தது.
இவர்கள் எல்லோரும் ஒன்றாக வேலை பார்க்கும் நபர்கள். உடனே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, ஆறு பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இவர்கள் 6 பேரில் 3 பேரின் உடல்நிலை மோசமாகவே மருத்துவர்கள் பதற்றத்திற்கு உள்ளானார்கள்.
காய்ச்சல் போல இருந்தாலும் மருந்து வேலை செய்யவில்லை. தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த 6 பேரில் 3 பேர் பலியான நிலையில் சீனாவின் சுகாதாரத்துறை நடுங்கிப்போனது. உடனே சீனாவின் வுஹானில் உள்ள வுஹான் வைரஸ் ஆராய்ச்சி மையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தொடக்கம்
உடனே அங்கு வந்த வுஹான் ஆராய்ச்சியாளர்கள் குழு 6 பேரின் உடலில் இருந்தும் ரத்த மற்றும் எச்சில் மாதிரிகளை எடுத்து சென்றனர். 9 வருடங்களுக்கு முன் நடந்த இந்த சம்பவம் தான் கோவிட்டின் தொடக்கம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இதுதான் கோவிட் ஆதி புள்ளி! 9 வருடத்திற்கு முந்தைய இந்த சம்பவத்தையும், 2019 இறுதியில் பரவ தொடங்கிய கோவிட்வையும் முடிச்சி போட காரணம் இல்லாமல் இல்லை. இந்த காய்ச்சல் வந்த 6 பேரும் மைனிங் பணியில் ஈடுப்பட்டு வந்தவர்கள்.
அறிகுறி
இவர்கள் யுன்னான் பகுதியில் உள்ள டுகுவான் நகரத்தில் குகையை தூய்மைபடுத்தும் பணியில் ஈடுபட்டு வந்தனர். அங்கு இருந்த வௌவால்களை அகற்றும் பணி தான் இவர்களுக்கு வழங்கப்பட்டது. குகை முழுக்க இருந்த வௌவால்களை அகற்றிவிட்டு, பாறைகளை அகற்றுவது தான் இவர்களுக்கு அளிக்கப்பட்ட பணி. ஒரு வாரம் இவர்கள் அங்கு பணியாற்றிய நிலையில், 6 பேருக்கும் இந்த நோய் தாக்கியது.
என்ன நோய்?
இவர்கள் 6 பேருக்கும் வௌவாலில் இருந்த வைரஸ் தாக்கியது என வுஹான் வைரஸ் மையம் செய்த ஆராய்ச்சியில் உறுதி செய்யப்பட்டது.
இவர்களின் உடலில் “ஆர்ஏடிஜி 13” என்ற வைரஸ் தாக்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட “ஆர்ஏடிஜி 13” வகை வைரஸ் ஒரு வகையான வௌவால் வைரஸ் ஆகும். வௌவாலில் காணப்படும் வைரஸ் வகை. இது வௌவால்களில் இருந்து மனிதர்களுக்கு பரவும் திறன் கொண்ட வைரஸ் ஆகும்.
கோவிட்டின் ஆதி புள்ளி
அந்த குகையிலும் ஆராய்ச்சியாளர்கள் சோதனை செய்து சாம்பிள்களை வுஹான் ஆராய்ச்சி மையத்திற்கு கொண்டு சென்றனர். இதன் மூலம் குகையிலும் “ஆர்ஏடிஜி 13” வைரஸ் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கடைசியில் இந்த குகையில் உள்ள வௌவாலில் இருந்து தான் இவர்களுக்கு “ஆர்ஏடிஜி 13” வைரஸ் தாக்கி இருக்கும் என்று உறுதி செய்யப்பட்டது. இந்த “ஆர்ஏடிஜி 13” வைரஸ் தாக்கிய காரணத்தால் தான் 6 பேர் பாதிக்கப்பட்டு 3 பேர் பலியானார்கள்.
எப்படி
இவர்கள் எல்லோருக்கும் வந்த அறிகுறிகள் 98% கோவிட்வுடன் ஒத்துப்போவதாக ஆஸ்திரேலிய மற்றும் அமெரிக்க மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். அதாவது கோவிட் வைரஸ் என்பது பேட் வைரஸ்களின் குடும்பத்தை சேர்ந்தது.
ஏற்கனவே பல வகை கோவிட் வைரஸ்கள் இருந்துள்ளது. அதன் முன்னோடி தான் இந்த “ஆர்ஏடிஜி 13” வைரஸ் என்று அவுஸ்திரேலிய மற்றும் அமெரிக்க மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். 9 வருடங்களுக்கு முன் சீனாவில் உருவான இந்த வைரஸ் தான் தற்போது மனிதர்களிடம் பரவும் கோவிட் 19ன் மூதாதையர் என்று அவர்கள் கூறுகிறார்கள்.
பரவியதா?
அப்படி என்றால் 9 வருடமாக இந்த வைரஸ் மக்களிடையே மெதுவாக பரவியதா? நமக்கு தெரியாமல் பரவியதா என்ற சந்தேகம் எழலாம்.. ஆனால் இந்த வைரஸ் அந்த 6 பேரை தவிர அப்போது யாருக்குமே பரவவில்லை. அப்போது வேறு யாருக்கும் வைரஸ் தாக்கவில்லை.
காரணம் “ஆர்ஏடிஜி 13” மனிதர்களிடம் இருந்து இன்னொரு மனிதர்களுக்கு அவ்வளவு வேகமாக பரவ கூடியது இல்லை. அவ்வளவு எளிதாக இது மியூட்டேட் ஆகாது. “ஆர்ஏடிஜி 13” வைரஸ் மனிதர்களிடம் இருந்து இன்னொரு மனிதருக்கு வேகமாக பரவும் அளவிற்கு சக்தி பெற, உருமாற்றம் அடைய பல நூற்றாண்டுகள் ஆகும்.
பின் எப்படி சென்றது
இந்த “ஆர்ஏடிஜி 13” வைரஸ் இயற்கையாக பரவி இருக்காது.. ஆனால் இந்த சாம்பிளை எடுத்து சென்ற வுஹான் ஆராய்ச்சி மையம் மூலம் இது கசிந்து இருக்கலாம் என்று அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் பலர் கூறுகிறார்கள்.
“ஆர்ஏடிஜி 13” பேட் வகை வைரஸ் தற்போது இருக்கும் கோவிட் வைரஸ் உடன் 96.2% ஒத்து போகிறது. அப்படி என்றால் கோவிட் வைரஸ் “ஆர்ஏடிஜி 13” மூலம்தான் உருவாகி இருக்க முடியும். இந்த உருமாற்றத்திற்கு தான் வுஹான் ஆராய்ச்சி மையம் உதவியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
உருமாற்றம்
ஆர்ஏடிஜி 13யை கோவிட்வாக உருமாற்றியது வுஹான் மையம்தான் என்று புகார் வைக்கப்படுகிறது. இயற்கையாக “ஆர்ஏடிஜி 13” வைரஸ் கோவிட் வைரஸாக உருமாற்றம் அடைய பல நூற்றாண்டுகள் ஆகும், ஆனால் ஆய்வகத்தில் இதை சில வருடங்களில் உருமாற்றம் அடைய வைக்க முடியும் என்கிறார்கள்.
அதாவது பரிணாம வளர்ச்சியை துரிதப்படுத்தி, இந்த வைரஸை உருமாற்றம் அடைய வைப்பது. Gain of function என்று இதை பரிணாம ஆராய்ச்சியாளர்கள் அழைக்கிறார்கள். அதாவது வைரஸின் ஜீன்களை, ஆர்என்ஏ, டிஎன்ஏவை தூண்டிவிட்டு அதை வேகமாக உருமாற்றம், பரிணாமம் அடைய வைப்பது ஆகும்.
வேறு
அதேபோல் ஒரு வைரஸில் வேறு சில வைரஸ்களை சேர்த்து அதன் குணாதிசியங்களை சில வருடங்களில் மாற்றுவதுதான் இந்த Gain of function முறையாகும். சீனாவின் வுஹான் ஆராய்ச்சி மையத்தில் தான் இந்த Gain of function முறை மூலம் ஆர்ஏடிஜி 13 முழுமையான கோவிட் வைரஸாக மாற்றம் அடைந்து இருக்கும் என்று குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.
பல நூற்றாண்டுகளில் மாற வேண்டிய வைரஸை 7 வருடங்களில் உருமாற்றி 2019ல் கோவிட்டாக வெளியேற்றி இருக்கலாம் என்கிறார்கள்.
வைரஸ் மாறியது
அதாவது மனிதர்களுக்கு வேகமாக பரவும் திறன் இல்லாத ஆர்ஏடிஜி 13 வைரசை gain of function மூலம் அதை கோவிட் வைரஸாக மாற்றி ஆராய்ச்சி செய்து உள்ளனர். இது வுஹான் ஆராய்ச்சி மையத்தில் இருந்து தெரிந்தோ அல்லது தெரியாமலோ வெளியேறி இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.
ஆராய்ச்சி
சீனாவின் வுஹான் வைரஸ் மையம் கோவிட் வைரஸில் ஆராய்ச்சி செய்தது உலகமே அறிந்தது. சீனாவின் பேட் வுமன் என்று அழைக்கப்படும் ஷி ஷெங்க்லி கூட இதை உறுதி படுத்தி இருக்கிறார். இதனால் அமெரிக்கா உள்ளிட்ட பல நாட்டு ஆராய்ச்சியாளர்கள் இந்த வுஹான் மைய ஆராய்ச்சி தான் கோவிட் 19 உருவாக்கியது என்கிறார்கள்.
ஆண்டனி
அமெரிக்காவின் தலைமை மருத்துவ ஆலோசகர் ஆண்டனி பவுச்சி தற்போது கோவிட் வைரஸின் தோற்றம் மீது சந்தேகம் தெரிவிக்கவும், அமெரிக்க அதிபர் பைடன் 90 நாட்களில் இதன் தோற்றத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்று விசாரணைக்கு உத்தரவிட்டதற்கும் கூட இதுவே காரணம் என்கிறார்கள். இந்த புதிய தியரி வெளிச்சத்திற்கு வந்ததால் தான், இதை பற்றி விசாரிக்க உள்ளனர் என்கிறார்கள்.
சந்தேகம் வலுக்கிறது
அதோடு சீனாவில் முதலில் கோவிட் மூலம் தாக்கப்பட்ட வுஹான் பகுதி மக்களில் பலர் அந்த வுஹான் மார்கெட்டிற்கு செல்லவே இல்லை. அதனால் அந்த மார்க்கெட் மூலம் வைரஸ் பரவி இருக்கும் என்று சொல்லவே முடியாது.
இது கண்டிப்பாக வுஹான் ஆராய்ச்சி மையத்தில் இருந்து கசிந்து வெளியேறி இருக்கலாம் அல்லது திட்டமிட்டு வெளியேற்றப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கிறார்கள்.. 9 வருடங்களுக்கு முன் நடத்த குகை சம்பவமே இதன் தொடக்கமாக இருக்கும் என்கிறார்கள்.




















