தமிழகத்தில் தண்ணீரில் மூழ்கி விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் வெங்கடேஷ் என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் வெங்கடேஷ் தனது நண்பர்களான சீனிவாச ரெட்டி மற்றும் நாகேஷ் போன்றோருடன் இணைந்து அப்பகுதியில் உள்ள விவசாய சொட்டுநீர் பாசன தண்ணீர் தொட்டியில் நீச்சல் பழகி கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக வெங்கடேஷ் தண்ணீரில் மூழ்கி விட்டார். இது குறித்து தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.