தமிழ் சினிமாவில் பெரிய நடிகர்களின் பிறந்தநாள் ஒரு திருவிழா போலவே ரசிகர்களால் கொண்டாடப்படும். அதில் விஜய்-அஜித் ரசிகர்களின் கொண்டாட்டங்கள் பெரிய அளவில் இருக்கும்.
பெரிய பேனர்கள், போஸ்டர்கள், அன்னதானம், திரையரங்குகளில் ஸ்பெஷல் ஷோக்கள் என கலைகட்டும். அதேபோல் டுவிட்டரிலும் ஸ்பெஷல் DPக்கள் பிரபலங்களால் அறிமுகப்படுத்தப்பட்டு ரசிகர்களால் வைரலாக்கப்படும்.
வரும் ஜுன் 22ம் தேதி கொரோனா தாக்கம் குறைந்து காணப்பட்டால் விஜய் பிறந்தநாள் கோலாகலமாக இருக்கும், ஆனால் இப்போதைக்கு ஒன்றும் கூற முடியாது.
தற்போது அவரது பிறந்தநாளுக்காக ஸ்பெஷல் டுவிட்டர் DP பல ரசிகர்களால் டிசைன் செய்யப்பட்டு வருகிறது, யாருடையது இறுதியாகும் என்பது தெரியவில்லை.