பொரளை பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான நபர் தப்பிச்சென்றுள்ள நிலையில் அவரை பிடிப்பதற்கு பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர்.
பொரளை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கடந்த 26 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட பி சி ஆர் பரிசோதனைகளின் பிரகாரம் குறித்த நபருக்கு தொற்றுள்ளமை நேற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து சிகிச்சை நிலையத்திற்கு அழைத்துச் செல்வதற்காக சுகாதார துறையினர் நேற்று அவரது வீட்டிற்கு சென்றுள்ளபோது குறித்த நபர் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் அவர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 0718 59 15 87 , 0112 69 40 19 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் வழங்குமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.