பிரித்தானியாவில் கும்பல் ஒன்று அடுக்குமாடி குடியிருப்பில் அளவுக்கு மீறிய பணத்தை வைத்துக் கொண்டு அதை என்ன செய்வது என்று தெரியாமல், பொலிசாரிடம் சிக்கியுள்ளனர்.
பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Fulham-ல் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பொலிசார் மேற்கொண்ட அதிரடி சோதனையை தொடர்ந்து, மில்லியன் கணக்கான பணம் பறிமுதல் செய்யப்பட்டதால், இது சம்பந்தமாக மூன்று பேர் கைது செய்யப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த கிரிமினல் கும்பல், இந்த பணத்தை வைத்து என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வந்துள்ளனர், இது போன்ற சூழ்நிலையில் தான் பொலிசார் சுமார் 5 மில்லியன் பவுண்ட் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
இதுவரை இல்லாத அளவிற்கு லண்டனில் மிகப் பெரிய தொகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய மூன்று பேருக்கும் கடந்த வெள்ளிக் கிழமை நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது.
பணங்கள் அழுக்கு மூட்டைகள் மற்றும் ஷாப்பிங் செய்யும் பைகளில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில், படுக்கைக்கு அடியில் ஒளித்து வைத்து படி இருந்துள்ளது.
இப்போது கொரோனா தொற்று நோய் காலம் என்பதால், இந்த பணங்களை எல்லாம் எப்படி மாற்றுவது, மாற்றினால் பெரிய பிரச்சனையில் சிக்கிவிடுவோம் என்று இந்த கிரிமினல் கும்பல் தவித்து வந்துள்ளதாகவும், பொலிசாரின் நீண்ட கால தேடுதல் நடவடிக்கைகளுக்கு பின்னரே இந்த கண்டுபிடிப்பு சிக்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
லண்டனில் நடைபெறும் துப்பாக்கி சூட்டு வன்முறை மற்றும் போதைப் பொருள் பயன்படுத்துதல், காரணமாக பொலிசார் ஒரு நீண்ட விசாரணையை மேற்கொண்டு வந்தனர். அப்போது தான் பணம் மோசடி செயலில் ஈடுபடும் Sergejs Auzins என்பவரை பொலிசார் அடையாளம் கண்டுள்ளனர்.
இதே போன்று, கடந்த ஆண்டு ஜுன் மாதம் மற்றொரு நபரான Serwan Ahmadi என்பவன் Fulham-ல் உள்ள போர்ட்டியஸ் குடியிருப்பில் இருந்து வெளியேறும்போது கனமான பைகளை எடுத்துச் செல்ல சிரமப்படுவதைக் பொலிசார் கண்டுள்ளனர்.
இதையடுத்து, இதன் வழக்கு விசாரணை கடந்த வெள்ளிக் கிழமை Harrow Crown நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது Shamsutdinov’s-வுக்கு மூன்று ஆண்டுகள் ஒன்பது மாத சிறை தண்டனையும், 46 வயதான Sergejs Auzins-க்கு மூன்று ஆண்டுகள், நான்கு மாத சிறை தண்டனையும், 35 வயதான Serwan Ahmadi-க்கு ஒரு வருடம் மற்றும் எட்டு மாதங்களுடன் இடைநீக்கம் செய்யப்பட்ட சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டது.
இந்த தண்டனை அறிவிப்பு பின் உயர் பொலிஸ் அதிகாரி கூறுகையில், இது ஒரு மிகப் பெரிய பண பறிமுதல் என்பதால், தேசிய அளவில் மிகப் பெரிய ஒன்றாக பார்க்கப்படுகிறது.
பறிமுதல் செய்யப்பட்ட பணம் வன்முறை குற்றங்களைச் சமாளிக்க மெட் பொலிஸ் மற்றும் ஹோம் ஆபீஸ் நடவடிக்கைகளுக்கு நிதியாக அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பொலிசாருக்கு அவன் மீது சந்தேகம் ஏற்பட, உடனடியாக அவர் காரில் வைக்க முயன்ற பையை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த பையில், பணம் இருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து, பொலிசார் உடனடியாக அவரின் குடியிருப்பில் சென்று சோதனை மேற்கொண்ட போது, மிகப் பெரும் பண மோசடியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
சுமார் 5 மில்லியனுக்கும் அதிகமான பவுண்ட் அங்கே பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதோடு மட்டுமின்றி Shamsutdinov’s என்பவரின் வீட்டில் இருந்து 39,000 யூரோ மற்றும் 8,000 பவுண்ட் கண்டுபிடிக்கப்பட்டது.
இதற்கு, அடுத்த மாதம், வடக்கு லண்டனின் Serwan Ahmadi உள்ள தனது வீட்டில் இருந்து Serwan Ahmadi, என்ற நபர் வெளியேறும் போது சுமார் 60,000 பவுண்ட் கொண்ட ஒரு பையுடன் வெளியேறுவதை கண்டுபிடித்து, மூன்றாவது நபரையும் பொலிசார் கைது செய்தனர்.
அதன் பின் அவர் வீட்டில் சோதனை செய்த போது, 198,000 பவுண்ட் கிடைத்துள்ளது. தவறான வழியில் பெறப்பட்ட இந்த பணத்தை மறைத்து வைப்பதற்காக இடம் மாற்றம் செய்ய முயன்றதாகவும், அப்போது சிக்கிக் கொண்டதாகவும், மூன்று பேரும் கடந்த ஆண்டு குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளனர்.