தொலைக்காட்சி சீரியல் நடிகையாக பிரபலமானவர் நடிகை ஸ்ரீ தேவி அசோக். 2004ல் வெளியான புதுகோட்டையில் இருந்து சரவணன் என்ற படத்தில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார். இதையடுத்து பிரபல தொலைக்காட்சி சீரியலான கஸ்தூரி, இளவரசி, தங்கம், ராஜா ராணி, நிலா, பூவே உனக்காக உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து வருகிறார்.
சில ஆண்டுகளுக்கு முன் அசோக் என்பவரை திருமணம் செய்து கொண்ட ஸ்ரீதேவி தற்போது கர்ப்பமாகவுள்ளார். கர்ப்பகால புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வரும் ஸ்ரீதேவி கணவருக்கு சலூன் சென்று முடிவெட்டி அதை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டதற்கு ஒருவர் திட்டி மெசேஜ் செய்துள்ளார்.
கர்ப்பமாக இருக்கும் போது முடி வெட்டக்கூடாது என்று ஆரம்பித்து பல மெசேஜ்களை செய்துள்ள அந்த நபரால் ஸ்ரீதேவி கடுப்பாகி விவாதம் செய்துள்ளார். இதற்கு பலர் ஸ்ரீதெவிக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.