விஜய் தொலைக்காட்சியில் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியல் லாக் டவுன் சமயத்திலும் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறது.
தற்போது பாக்கியலட்சுமி-பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் மெகா சங்கமம் நடந்து வருகிறது.
இந்த பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வருபவர் ராதிகா என்ற ஜெனிபர். அடுத்தடுத்து சீரியல்கள் நடித்துவரும் இவர் சன் தொலைக்காட்சியில் ஒரு தெய்வீக சீரியலில் நடித்துள்ளார்.
2008ம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான நாகவல்லி சீரியலில் நடித்துள்ளார். அதில் அவர் அடையாளம் தெரியாத அளவிற்கு ஆளே வேறு ஒருவர் போல் உள்ளார்.
அவரது ரசிகர்கள் நாகவல்லி சீரியலின் அவரது லுக்கை ஷேர் செய்து வருகிறார்கள்.