சீனாவிடம் இருந்து வாங்கிய கடனை, கழுதைகளை விற்று பாகிஸ்தான் அடைக்கிறது. உலகளவில் அதிக கழுதைகளை கொண்ட 3வது நாடாக பாகிஸ்தான் உள்ளது. 2021ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்நாட்டில், எருமைகளின் எண்ணிக்கை 12 லட்சமாக அதிகரித்துள்ளது.
ஆடுகள் எண்ணிக்கை 3.2 கோடியில் இருந்து 3.5 கோடியாக உயர்ந்துள்ளது. செம்மறி ஆடு இனப்பெருக்க எண்ணிக்கை ஆண்டுக்கு 4 லட்சமாக உயர்ந்துள்ளது.
இதேபோல், கழுதைகளின் எண்ணிக்கை கடந்த ஒரே ஆண்டில் ஒரு லட்சம் அதிகரித்துள்ளது. இப்போதைய நிலையில், பாகிஸ்தானில் 56 லட்சம் கழுதைகள் உள்ளன. பாகிஸ்தான் தனது நாட்டில் கழுதைகளின் இனப்பெருக்கத்தை அதிகரிப்பதற்கு பெரிய காரணம் உள்ளது.