மத்திய பிரதேச மாநிலத்தில் 2 மாமரத்தில் உள்ள 7 மாங்காய்களை பாதுகாக்க அதன் உரிமையாளர் 4 பாதுகாவலர்களையும் 6 நாய்களையும் நியமித்த சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம்ல ஜபல்பூரை சேர்ந்த தம்பதி ராணி மற்றும் சங்கல்ப் பரிகார். அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு மாமரகன்றுகளை தங்களது நிலத்தில் நட்டனர்.
அவர்கள் அந்த மரக்கன்றை சென்னைக்கு ரயிலில் வரும் போது அறிமுகமான ஒரு நபரிடமிருந்து பெற்றனர். இவர்கள் அதை வாங்கும் போது சாதாரண மாமரமாக தான் இருக்கும் என நினைத்தனர்.
இந்த மரம் வளர்ந்த போது அதிலிருந்து ரூபி ரெட் நிறத்தில் மாங்காய்கள் காய்த்தது. இதை பார்க்கும் போது அவர்களுக்கு இது குறித்து எதுவும் தெரியவில்லை.
பின்னர் அந்த மாங்காய் வளர வளர அது வித்தியாசமான கலரிலிருந்தது. இதையடுத்து அவர்கள் அந்த மாங்காய் என்னவாக இருக்கும் என ஆன்லைனிலும், விவசாய ஆய்வளர்களிடமும் விசாரித்தனர்.
அதன் பின் தான் அந்த மாங்காய் உலகிலேயே மிக அரிய வகையான மியாசாகி மாங்காய் என தெரிந்துள்ளது. இதையடுத்து அவர்கள் தங்களுக்கு ஜாக்பாட் அடித்துள்ளதை உணர்ந்தனர்.
இது குறித்து அவர் கூறும் போது : “இந்த செடியை எங்களுக்கு வழங்கியவர் இதை எங்கள் குழந்தைகள் போல பாதுகாத்துக்கொள்ளுங்கள் என கூறினார்.
அப்பொழுது இது என்ன ரக மாம்பழம் என்பது எங்களுக்கு தெரியவில்லை. இந்த பழம் வந்த போது அது வித்தியாசமான நிறத்திலிருந்து இது என்ன ரகம் என எங்களுக்கு தெரியவில்லை. அதனால் இதற்கு எனது அம்மாவின் பெயர் தாமினி என பெயரிட்டோம் . அதன் பின் தான் இது உலகின் அரிய வகையான மியாசாகி வகை மாம்பழம் என்று தெரிந்தது. ” என கூறியுள்ளார்.
தற்போது அவர் நட்டத இரண்டு மரங்களிலும் மொத்தமே 7 மாங்காய்கள் உள்ளனர். அந்த மாங்காய்கள் திருடு போகும் அபாயம் இருப்பதால் அதற்கு 4 பாதுகாவலர்களையும் 4 நாய்களையும் பாதுகாப்பிற்காக போட்டுள்ளனர்.
இந்த மாய்காய்கள் நன்கு விளைந்த பின்பு அதை கொட்டைகளை வைத்து இதே போல அதிக மரங்களை நட முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
இந்த மாம்பழங்கை விற்பனை செய்யும் எண்ணம் அவர்களுக்கு தற்போது இல்லை. இந்த மியாசாகி வகை மாம்பழம் இந்தியாவில் மிகவும் அரிது.
இதன் பூர்வீகம் ஜப்பானின் மியாசாகி நகரம். அதனலேயே இதன் பெயர் மியாசாகி என பெயரிட்டுள்ளனர்.
இந்த மாம்பலம் மிக அரிதாக கிடைக்ககூடியது அதனால் இதன் விலை மார்கெட்டில் கிலோவிற்கு ரூ2.70 லட்சம் என விற்பனையாகிறது. இந்த மாங்காயின் ஒரு மாங்காய் மட்டும் ரூ21 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது.