தமிழ் சினிமாவில் தீராத விளையாட்டுப் பிள்ளை, வில்லு உள்ளிட்ட படங்களில் பல ஹிட் பாடல்களை பாடியுள்ளவர திவ்யா.
இவர், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார். சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக இயங்க கூடிய திவ்யாவை, ஒரு நபர் ZayoKair என்ற ஐடியில் இருந்து தொடர்பு கொண்டு புரமோஷன் செய்யவேண்டும் என்று மெசேஜ் கொடுத்துள்ளார்.
இதனை தொடர்ந்து திவ்யா உங்களுடைய பிராண்டின் ஐடியில் இருந்து என்னை தொடர்பு கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
ஆனால், மர்ம நபர் ஆண்களின் அந்தரங்க உறுப்பு வீடியோ ஒன்றை அனுப்பி உங்களுக்கு திருப்தி அளிக்கிறதா? என கேட்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சியான திவ்யா, அந்த நபரின் மெசேஜ்கள் அனைத்தையும் ஸ்கிரீன்ஷாட் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும், இதுபோன்ற வக்ரவாதிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்து, தொடர்ந்து சைபர் கிரைமில் புகார் அளிக்கப் போவதாக கூறியுள்ளார்.