நடிகர் சித்தார்த் சிறுவயதில் இறந்துவிட்டதாக யூரியூப் சேனலில் முகப்பில் புகைப்படம் வந்துள்ளதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
யூடியூப் சேனல்களில் பிரபலங்களின் தகவல்கள் மற்றும் இளம்வயதில் இறந்த நடிகர் நடிகைகள், நடிகையர்களின் சம்பளம் உள்ளிட்ட விபரங்களை யூடியூப் சேனல்கள் போடுவதை வழக்கம் வைத்திருக்கின்றனர்.
வெளியில் தலைப்பு மற்றும் புகைப்படங்களை மிரட்டலாக கொடுத்துவிட்டு, பார்வையாளர்களை அதிர்ச்சியடைய வைப்பார்கள். உள்ளே சென்று பார்த்தால் மட்டுமே தெரியும் உண்மை என்னவென்று, அதே போன்று தற்போது சித்தார்த் ஒன்றில் சிக்கியுள்ளார்.
அந்த வகையில் ஒரு யூடியூப் சேனல் கடந்த 3 தினங்களுக்கு முன்னர் ஒரு யூடியூப் சேனல் இளம் வயதில் இறந்த 10 தென்னிந்திய நடிகர், நடிகைகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதில் சில்க் ஸ்மிதா தொடங்கி நடிகை திவ்ய பாரதி வரை அவர்களின் புகைப்படங்கள் எப்போது இறந்தனர், இறக்கும் போது அவர்களின் வயது என்ன என்பது குறித்து தொகுப்பை வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.
இந்த வீடியோவின் முகப்பில் நடிகை சவுந்தர்யா, நடிகர் சித்தார்த், நடிகை ஆர்த்தி அகர்வால் ஆகியோரின் படங்கள் போடப்பட்டிருந்தன.
இதனை அவதானித்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்ததுடன், தங்களது ஆதங்க கருத்தினையும் வெளியிட்டுள்ளனர்.
ஆனால் தெலுங்கு ரசிகர் ஒருவர் நடிகர் சித்தார்த்திற்கு இந்த புகைப்படத்தையும் வீடியோவையும் டேக் செய்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இதற்கு நடிகர் சித்தார்த், தனது ட்வீட்டில் இந்த வீடியோ குறித்து நான் யூடியூப் சேனலுக்கு ரிப்போர்ட் செய்தேன். அதற்கு அவர் மன்னித்துவிடுங்கள். ஆனால் வீடியோவில் எந்தவிதமான தவறும் இல்லை என தெரிவித்தனர்.
என்னுடயை ரியாக்ஷன் அடபாவி என சித்தார்த் கொமடியாக பதில் தெரிவித்துள்ளார். அதாவது முகப்பில் மட்டுமே சித்தார்த் படம் உள்ளது, உள்ளே வீடியோவில் சித்தார்த்தின் படம் இல்லை என்பதே.