சாம்சங் நிறுவன ஸ்மார்ட்போன் மாடல் விமானத்தில் வெடித்து சிதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது
சாம்சங் நிறுவனத்தின் சில ஸ்மார்ட்போன்கள் வெடித்து சிதறும் வகையிலான பிரச்சினைகளை கொண்டிருந்தன. இதன் காரணமாக பல்வேறு அசம்பாவிதங்களும் அரங்கேறியதாக பலர் சமூக வலைதளங்களில் தெரிவித்து இருக்கின்றனர்.
அந்த வகையில் நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம் சாம்சங் ஸ்மார்ட்போன் வெடித்து சிதறியதால் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. நியூ ஆர்லின்சில் இருந்து சியாட்டிள் நோக்கி சென்று கொண்டிருந்த அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்தவரின் சாம்சங் கேலக்ஸி ஏ21 திடீரென தீப்பற்றி எரிந்தது.
இந்த சம்பவத்தில் விமான பயணிகள் மற்றும் விமான ஊழியர்களுக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தில் முழுமையான ஆய்வு நடத்தப்படும் என சாம்சங் தெரிவித்து இருக்கிறது.